இந்தியா-அமெரிக்கா:44 ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
மும்பையில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் மற்றும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டார்.
உற்பத்தி, போக்குவரத்து, மருந்து தாயாரிப்பு, மாசற்ற எரிசக்தி போன்ற பல்வேறு துறைகள் குறித்து தொழில் அதிபர்களுடன் அவர் பேசினார்.
அந்த கூட்டத்தில் ஒபாமா, ’’அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 20 ஒப்பந்தங்கள் ஏற்பட்டு உள்ளன. ரூ.44 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன’’ என்று கூறினார்.
Nakkheeran.in